Thursday, February 12, 2015

பழந்தமிழ்ப் பண்ணிசை என்பது யாது?

பழந்தமிழ்ப் பண்ணிசை என்பது யாது?


நம் தமிழ்மொழியினைப் போல, தமிழிசையென்பது நம்முடைய மிகப் பழமையான இசைச் செல்வமாகும். சங்கத்தமிழானது (அ) இயற்றமிழ், (ஆ) இசைத்தமிழ், (இ) நாடகத்தமிழென மூன்று வகையினதாய் தழைத்தோங்கி இருந்தமைக்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் இன்று தமிழைத் தாய்மொழியாய் கொண்டவரில் கையளவினரே தமிழிசை என்று ஒன்று இருந்தமையை அதுவும் வெறும் ஏட்டளவிலேயே அறிந்திருக்கின்றனர் என்று சொன்னால் அது மிகையான வழக்கல்ல. இன்றைக்கு கர்நாடக சங்கீதம் என்று வழங்கப்படும் இசைக்கும் தமிழிசைக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு. இன்னும் சொல்லப்போனால் இன்று தழைத்தோங்கி இருக்கும் கர்நாடக இசையே தமிழிசையின் மறுவடிவம் என்று நிலைநாட்டக் கூடிய அளவிற்கு இந்த ஒற்றுமைகளும், தமிழிசையின் பழமையும், இலக்கிய ஆதாரங்களும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவக்கூடும். இன்றைக்கு நமக்கு புரியும் வகையில், தமிழிலுள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் தமிழிசை பற்றிய பல செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

தமிழிசையும் கர்நாடக இசையும்:

இற்றைக்குக் கிடைக்கின்ற ஆதாரங்களை நோக்குங்கால், இன்று செழித்தோங்கி இருக்கும் கர்நாடக இசையின் வேர்களானது, ஒன்று தமிழிசையுடன் ஒன்றி வளர்ந்திருக்க வேண்டும் அல்லது தமிழிசையுடனே தோன்றியிருக்க வேண்டுமென்றே எண்ணத் தோன்றுகிறது. இரண்டு இசை மரபுகளையும் ஒப்பு நோக்குகையில் இன்றைய கர்நாடக இசையில் பயன்படும் இசை வழக்குகள், முந்தைய பழந்தமிழ் இசையின் வழக்குகளுக்கு புதிதாகப் பெயரிட்டும், அதிக பயன்பாட்டினால் வளர்ச்சி அடைந்தும், கால மாறுபாட்டிற்கேற்ப உருமாற்றமடைந்தும் இருக்கின்றன என்றே தோன்றுகிறது. இணையத்தமிழ் அன்பர்களுக்காக, கர்நாடக இசைக்கு நேரான தமிழிசையின் பொதுவான வழக்குகள் பட்டியலிடப்பட்டு கீழே தரப்படுகிறது.

தமிழிசை வழக்கும் கர்நாடக இசை வழக்கும்:

௧. பண் = இராகம் 
௨.தாளம் = தாளம்
௩. பதம் = ஸ்வரம்
௪. பதம் ஏழு = ஸ்வரம் ஏழு
௫.ஆரோசை = ஆரோகணம்
௬.அமரோசை = அவரோகணம்
௭. குரல் = ஸ (ஸட்ஜமம்)
௮. துத்தம் = ரி (ரிஷபம்)
௯. கைக்கிளை = க (காந்தாரம்)
௧0. உழை = ம (மத்யமம்)
௧௧. இளி = ப (பஞ்சமம்)
௧௨. விளரி = த (தைவதம்)
௧௩. தாரம் = நி (நிஷாதம்)

இலக்கியத்தில் இசைக்கருவிகள்:

கர்நாடக இசையின் பெருமையான இசைக்கருவியான வீணை, கோட்டு வாத்தியம் இவைகளுக்கு இணையாக தமிழிசையில் சொல்லப்படும் இசைக்கருவி யாழ். வீணை பற்றிய குறிப்புகள் பல குறிப்புகள் இலக்கியங்களில் காணப்பட்டாலும், யாழிசைக்கு ஒரு சிறப்பான முதலிடம் தரப்பட்டிருந்ததை காணமுடிகிறது. வீணையைப் போன்றே யாழும் கம்பி/ நரம்புகளை இழுத்துக் கட்டப்பட்டு கைகளால் இசைக்கப்படும் கருவியாக இருந்திருக்கிறது. சுவாமி விபுலாநந்தாவின் “யாழ் நூலில்” யாழினைப் பற்றி பல விவரங்கள் கூறப்பட்டிருக்கின்றன.

ஏறுகாத்தம் புலியூரில் பிறந்த திரு நீலகண்ட யாழ்ப்பாணர் என்பவர் ஞானசம்பந்தரின் பதிகங்களை யாழிசைக் கருவியில் இசைத்துப் புகழ் பெற்றிருந்தார். திருமறையில் சொல்லப்பட்ட மற்ற இசைக்கருவிகளான வீணை, கொக்கரை, கொடுமுழா முதலியனவற்றைப் பற்றி “கல்லாடம்” நூலில் விளக்கங்கள் காணப்படுகின்றன. பன்னிரெண்டாவது திருமுறையான பெரியபுராணத்தில் மற்றொரு இசைக்கருவியான குழல் செய்வதைப் பற்றியும், இசைப்பதைப் பற்றியும் ஆனான நாயனார் புராணத்தில் பதிமூன்றாவது, இருபத்து நான்காவது, இருபத்தெட்டாவது பாடல்களில் சொல்லப்படுகின்றது.

தமிழ்ப் பதிகங்கள்:

இன்று நமக்குக் கிடைத்திருக்கும் பதிகங்களில் பெரும்பாலானவை, சிவபாத சேகரன் என்றும், திருமுறைகண்ட சோழனென்றும் போற்றப்பட்ட இராச இராச சோழனின் பெரு முயற்சியால் சிதம்பரம் கோவிலில் பூட்டி வைக்கப்பட்ட அறையிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டளவில் வெளிக் கொணரப்பட்டவையே. அவற்றில் பண்ணிசை ஏதென்று அறியாத பதிகள் இருக்கக் கண்டு, அச்சோழன் யாழ்ப்பாணர் பரம்பரையில் வந்த மாதங்க சூளா மணியார் என்னும் பெண்மணியை அழைத்துப் பண்ணினை வரையறுக்கும்படிப் பணிக்க, அவர் வரையறுத்தப் பண் வரிசையிலேயே அவைகள் இன்றும் பாடப்படுகின்றன.

பத்து பத்தாக பாடல்களைப் பாடும் பதிகங்கள் என்ற முறையின் முன்னோடியாகச் சொல்லப்படுபவர் காரைக்காலம்மையார் என்று போற்றப்படும் புனிதவதியார். இவரைத் தொடர்ந்து சைவ சமயத்தின் நான்கு தூண்களாக சொல்லப்படும் (1) அப்பர் (2) சம்பந்தர் (3) சுந்தரர் (4) மாணிக்கவாசகர் இவர்களில் முதல் மூவர் பல பதிகங்களைத் தமிழ்ப்பண்ணிசையில் பாடியிருக்கின்றனர். தேவாரப்பண்கள் மக்களிடையே மிகப் புகழ்பெற்றமையால், இராச இராசசோழன் தொடங்கி பல தமிழரசர்கள் தமிழகத்தின் கோவில்களில் இவற்றை முறைப்படி இசையுடன் பாட ஓதுவார்கள் என்னும் இசைக்கலைஞர்களை நியமித்தனர். இவ்வோதுவார்களின் பணி இன்றும் தமிழகக் கோவில்களில் தொடர்கிறது.


இசைக்கலைஞர்கள் - பாணர் / ஓதுவார்:

சங்க இலக்கியத்தில் இசைக்கலைஞர்கள் என்பவர்கள் தமிழிசையை வளர்க்கப் பாடுபட்ட பாணர்கள் (ஆண் இசைஞர்கள்), பாடினியர் (பெண் இசைஞர்கள்) என்ற குறிப்புகள் காணப்படுகின்றன. இன்றைய இலங்கையிலுள்ள யாழ்பாணம் என்ற இடம் யாழிசையினைப் பின்பற்றியே பெயர் கொண்டிருப்பதும் இதற்கு மேலும் வலுவூட்டுகின்றது. பாணர்களை முக்கிய பாத்திரமாக வைத்து எழுதப்பட்டப் பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுபடை இவைகளைச் சொல்லலாம்.

தேவாரப் பண்கள்:

திருநாவுக்கரசர் அருளியத் தமிழ்ப் பதிகமான தேவாரத்தில் கீழ்வரும் இருபத்தோரு பண்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சிலர் இருபத்துநான்கு என்றும், இன்னும் சிலர் இருபத்தேழு என்றும் கூறுகின்றனர். எப்படியாயினும் தேவாரம் முழுதுமே ஒரு முறையான பண்ணிசை வரிசையில் அமைக்கப்பட்டிருப்பத்தைக் காணலாம். ஆனால் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டப் பட்டியல் திருமுறைகளில் பயன்படுத்தப்பட்ட வரிசையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பதாவது திருமுறையில் சொல்லப்படும் “சாளராபாணி” என்னும் பண் மற்ற திருமுறைகளில் பயன்படுத்தப்படவே இல்லை.

தமிழிசையில் பண்களும் அதற்கு நேரான இராகங்களும்: 

பல தமிழ்ப்பண்கள் கர்நாடக இசையின் இராகங்களுடன் ஒத்துப் போனாலும், வேற்றுமைகள் இருக்கத்தான் செய்கின்றன. எடுத்துக்காட்டாக தமிழிசையில் மேகராகக் குறிஞ்சியை மழை தருவிக்கும் பண்ணாக கூறுகின்றனர். அதற்கு இணையான கர்நாடக இசை இராகம் நீலாம்பரி என்பது இரவில் பாடும் தாலாட்டுப் பாடல். ஆனால் கர்நாடக இசையில் மழை இராகம் அமிர்த வர்ஷினி என்று சொல்லப்படுகிறது. எங்காவது வறட்சி என்றால், மேகராகக் குறிஞ்சியில்தான் பதிகங்கள் பாடப்பட்டிருக்கின்றன. திருஞான சம்பந்தருடைய திருவையாறு பதிகம் கூட இதனையே குறிக்கிறது.

தமிழ்ப்பண்களும் கர்நாடக இராகங்களும்: 

தமிழ்ப்பண் கர்நாடக இராகம்

௧. நட்டப்பாடை = நாட்டை
௨. கொல்லி, = நௌரோஸ்
௩. பியந்தைக்காந்தாரம், = நௌரோஸ் 
௪. காந்தாரம், = நௌரோஸ்
௫. கொல்லிக் கௌவானம் = நௌரோஸ்
௬. கௌசிகம் = பைரவி
௭. யாழ்முரி = அடானா
௮. நட்டராகம் = பந்துவராளி
௯. சாதாரி = பந்துவராளி
௧0. தக்கராகம், தக்கேசி = காம்போதி
௧௧. புறநீர்மை = பூபாளம்
௧௨.அந்தாளிக் குறிஞ்சி = சியாமா
௧௩. பழந்தக்கராகம் = சுத்தசாவேரி

௧௪. பழம்பஞ்சுரம் = சங்கராபரணம்

௧௫.செவ்வழி = யதுகுல காம்போதி
௧௬.காந்தார பஞ்சமம் = கேதார கௌளை
௧௭.இந்தளம், சீகாமரம் = நாதநாமக்கிரியை
௧௮.குறிஞ்சி = ஹரிகாம்போதி
௧௯.செந்துருத்தி = மத்யமாவதி
௨0.பஞ்சமம் = ஆகிரி
௨௧.மேகராகக்குறிஞ்சி = நீலாம்பரி
௨௨.வியாழக்குறிஞ்சி = சௌராஷ்டிரம்
௨௩. சாளராபாணி = ***** 
௨௪.மோகனம் = *****

திருக்குறுந்தொகை, திருநேர்ச்சை, திருவிருத்தம், திருத்தாண்டகம் ஆகிய பாடல்கள் ஒரு பாட்டின் வடிவமைப்பினை குறிப்பதாகத் தெரிகின்றமையால், இவை எந்தப் பண்ணிலும் பாடலாம். ஆயினும் வழக்காக சில பண்களால் பாடப்படுகின்றன.

மேலே சொல்லப்பட்ட பட்டியலில், சொல்லப்பட்ட பண்களில் சிலவற்றிற்கு கர்நாடக இசையில் நேரான இராகங்களாகச் சொல்லப்படுபவை இருந்தாலும், ஒரு சில வேறுபாடுகள் இருக்கக் கூடும். தமிழிசையிலும், கர்நாடக இசையிலும் விற்பன்னராக இருப்பவர்கள் இதனை நன்கு விளக்கிக் கூற இயலும். மேலும் காலையிலிருந்து இரவு வரை வெவ்வேறு காலகட்டங்களில் குறிப்பிட்ட கால அளவுகளில் ஒரு வரிசை முறையில் பாடக்கூடிய தமிழ்ப் பண்ணிசைகளை சொல்லியிருக்கிறார்கள்.

காலையிற் பாடும் பண்களாக சொல்லப்படுபவை புறநீர்மை, காந்தாரம், பியந்தைக் காந்தாரம், கௌசிகம், இந்தளம், திருக்குறுந்தொகை, தக்கேசி, காந்தார பஞ்சமம், பஞ்சமம் ஆகியவையாகும். மாலையிற் பாடும் பண்களாக சொல்லப்படுபவை தக்கராகம், பழந்ததக்க ராகம், சீகாமரம், கொல்லி, கொல்லிக் கௌவானம், திருநேர்ச்சை, திருவிதானம், வியாழக் குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி, குறிஞ்சி, அந்தாளிக் குறிஞ்சி ஆகியவையாகும். அதுபோலவே எந்தக் காலத்தும் பாடும் பண்களாக சொல்லப்படுபவை, செவ்வழி, செந்துருத்தி, திருத்தாண்டகம் ஆகியவையாகும்.

நன்றி முகநூல்

Tuesday, February 10, 2015

கோச்சடையன் !

கோச்சடையன் !
சமீபத்தில் தமிழ மக்கள் அதிகமாக உச்சரித்த பெயர் ” கோச்சடையன் ” , எப்படி உச்சரிக்காமல் இருக்க முடியும் ? தமிழக மக்கள் அனைவரின் அபிபான நடிகரின் வரப்போகும் படம் ஆயிற்றே ! !. இதில் நம்மில் எத்தனை பேர் அந்த படத்திற்கு கொடுக்கும் ஆர்வத்தை, அந்த பெயரின் சொந்தக்காரனின் வரலாற்றை பற்றி தெரிந்துகொள்ள கொடுத்திருப்போம் ! ! ? ? யார் இந்த ” கோச்சடையன் ” ? ? இதோ அவனைப்பற்றிய சில தகவல்கள்..சங்கம் வைத்து நம் தமிழை காத்த மரபில் வந்த பாண்டிய மன்னன் தான் இந்த ” கோச்சடையன் ரணதீரன் “கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தவன். அரிகேசரியின் மகனான இவன் தனது தந்தை கி.பி. 670 ஆம் ஆண்டளவில் இறந்தபின்னர் அரியணை ஏறினான். கடல் போன்ற சேனையினை உடையவன் எனப்படுகிறான்.
ரணதீரன் கோச்சடையன் என அழைக்கப்பட்டான். செங்கோல் தென்னன், வானவன், செம்யன், மதுரகருநாடகன், கொங்கர்கோமான், மன்னர் மன்னன் போன்ற பல பட்டப் பெயர்களைக் கொண்டிருந்தான். இதற்குச் சான்றாக வேள்விக்குடிச் செப்பேடு இருப்பது குறிப்பிடத்தக்கது.
படையெடுத்துச் சென்ற இவன், முதலில் சேர நாட்டை வென்றான். பின்னர் சோழ நாடு, கொங்கு நாடு, கருநாடகம் அனைத்தினையும் வென்று அனைவரையும் கப்பம் கட்டுமாறு ஆணையிட்ட இவன் மருதூரில் நடைபெற்ற போரில் பொதிய மலைத் தலைவன் ஆய்வேளையும் மங்கலபுரத்தில் மாரதரையும் வெற்றி கொண்டவனாவான். சாளுக்கிய மன்னனான விக்கிரமாதித்தனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றுப் பட்டம் பெற்றான் ரணதீரன். இவ்வாறு வேள்விக்குடிச் செப்பேடும் கேந்தூர்க் கல்வெட்டும் கூறுவது குறிப்பிடத்தக்கது. .
ரணதீரன் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்து அங்கு பாண்டியன் மகளை மணந்து, சோழ மன்னன் ஒருவனையும் சந்தித்தார். திருவாலவாய் இறைவனையும், திருப்பரங்குன்றப் பெருமானையும் பின் வணங்கினார் எனப் பெரிய புராணம் மற்றும் சுந்தரர் தேவாரமும் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. (பெரிய-கழறி-91-2) (சுந்தரர் தேவாரம் திருப்பரங்குன்றப் பதிகம்-பாட்டு-11).
இடைக்காலப் பாண்டியன் ரணதீரன் கி.பி. 710 ஆம் ஆண்டில் மரணமடைந்தான்.
இவ்வளவு சிறப்புடைய நம் மன்னனை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் ? ? ?.

காலம் காட்டும் கல்!!


காலம் காட்டும் கல்!!

கிளாசிக்கல் கிளாக் என்ற வரிசையில்
வெள்ளைக்காரன் மணல் கடிகாரம்
கண்டுபிடித்து பயன்படுத்தினான்!
தமிழன்
சூரியனை வைத்து கடிகாரம்
கண்டிபிடித்து பயன்படுத்தினான்!
அவன்
மண்ணை பார்த்து சிந்தித்தபோதே!
விண்ணை பார்த்து சிந்தித்தவன் தமிழன்!
இன்னும்
கோவில் கோபுரத்தின் நிழலை வைத்தும் நேரம்
அறிந்த தமிழன் ஒரு கருங்கல்
வைத்து துள்ளியமான நேரம் அறிந்திருக்கிறான்.
இதற்கு ஆதாரமான இன்னும்
நின்று கொண்டிருக்கிறது காலம் காட்டும் கல்!
வேலூர் அருகே விரிஞ்சிபுரம் என்ற ஊரில்
உள்ளது வழித்துணைநாதர் – மார்கபந்தீஸ்வரர்
கோயில். கோயிலின் உள்ளே தென்புறத்தில்,
‘காலம் காட்டும் கல்’ இருக்கிறது. அர்த்த
சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12
வரையும் எண்கள் அந்த கல்லில்
செதுக்கப்பட்டுள்ளன.
மேற்புறம் உள்ள பள்ளத்தின்
வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின்
நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான்
அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்.
இன்னும் வேலை செய்யும் இந்த அரிய கடிகாரக்
கல் சங்ககாலத் தமிழனின் தொழில்
நுட்பத்துக்கு நற்ச்சான்று!...

பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!

பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!
தயவுசெய்து நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.. விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்..!
பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம்ம்..!
பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லும்போது, பிளாஸ்டிக் சூடாகி வேதியியல் மாற்றங்களால் "ஹைட்ரோகார்பன்" மற்றும் "பியூரான்", 'கார்சினோஜினிக்" போன்ற நச்சு வாயுக்கள் உணவில் கலந்து விடுகின்றன. அந்த உணவை உண்பவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படுகிறது.அதுமட்டுமல்ளாமல்வயிற்றில் (ஸ்டொமக் கேன்சர்) ஜீன்களை தூண்டிவிடுகிறது.
மூளையில் சுரக்கும் சுரப்பியை மட்டுப்படுத்தி ஆண்மை குறைவை உண்டாக்குகிறது.இந்த அபாயம் புரியாமல்,பலரும் அவசர தேவைகளுக்காக சூடான உணவுப்பொருட்களை நேரடியாக பிளாஸ்டிக் கவர்களில் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்
இந்த அவசர உலகில் பிளாஸ்டிக்கை (பாலி வினை குல்லோரைட்) எல்லா இடங்களிலும் பயன் படுத்துகிறோம். எடுத்துச்செல்ல எளிதாக இருக்கும் என்று நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் "கேரி பேக்'களுக்குள் ஒளிந்திருக்கும் பயங்கரம் பற்றி, பலருக்கும் புரிவதே இல்லை.
சாதாரண வெப்ப நிலையிலேயே (நம் அறையின் சுட்டிலேயே) நீரூடன் வினை புரியும் சக்தி பிளாஸ்டிக்குக்கு உண்டு
உதா.ம்:- (பிளாஸ்டிக் பாட்டிலில் பாதி அளவுக்கு தண்ண்நிர் நிறப்பி வைக்க, சாதாரண வெப்ப நிலையிலேயே இரண்டு மணி நேரத்திற்கு பிறகு பாட்டிலில் காலியாக உள்ள இடங்களில் நீர்துளிகள் ஆவியாகி படிந்து உள்ளதை பாருங்கள்)
ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்கள் பெரும் பாலும் 20 மைக்ரானுக்கும் குறை வானவை. இவற்றை விற்பதும், வாங்குவதும், பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால்,நகரத்தில் இதன் விற்பனை யும், பயன்பாடும் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. தடையை மீறி வாங்கும் நுகர்வோர் களும், அந்த பிளாஸ்டிக் டம்ளர் களை பயன்படுத்தும் விதம் குறித்து அறிந்து கொள்ளாமல் பயன்படுத்தும் போது, அதன் ரசாயன தன்மை உடலுக்குள் சென்று விடுகிறது. பாலிவினை குளோரைடு வேதிப்பொருள், மனித உடலுக்குள் சென்றால், தீங்கு விளைவிக்கும்
ஓட்டல்களில் வாழ இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் இலை பார்சல் சாப்பாடு வாங்கினால் பிளாஸ்டிக்
பேப்பர் பார்சல் என பிளாஸ்டிக்கை தவிர்க்க முடியாமல் செய்து நமது வாழ்நாளை குறைத்து விடுகின்றனர்
உணவுப் பொருட்களில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்..!

மாவீரன் நெப்போலியன்

பயமா? பயம் என்றால் என்னம்மா?”
இரவில் தாயின் அருகில் படுத்திருந்த அந்த சிறுவனுக்கு ஏனோ தூக்கம் வரவில்லை.
படுக்கையை விட்டு எழுந்தவன் கதவை திறந்து வெளியே வந்தான். வீட்டின் அருகிலேயே குளம் இருந்தது பௌர்ணமி நிலவும் அதன் ஒளியில் ரம்மியமாக காட்சி தரும் குளத்தின் நீர்ப்பரப்பும் அவன் மனதை கவர்ந்தன.
அச்சிறுவன் குளக்கரையில் அமர்ந்து கொண்டு சிறுகற்களை நீரில் போட்டு அதன் மூலம் எழும் அலைகளை ரசித்தபடி இருந்தான்.
வீட்டில் திடுமென கண்விழித்த தாய் அருகில் படுத்திருந்த மகனை காணமல் பதறிப்போனாள்.
கதவு திறந்திருப்பது கண்டு பதை பதைப்புடன் வெளியே ஓடி வந்தாள்.
தன்மகன் குளக்கரையிலே அமர்ந்திருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.
அவன் அருகில் சென்று “மகனே நள்ளிரவு வேளையில் இங்கு வந்து தனியாக இருக்கிறாயே… உனக்கு பயம் இல்லையா?” என்று கேட்டாள்.
உடனே அந்த சிறுவன் “பயமா? பயம் என்றால் என்னம்மா?” என்று கேட்டான் அதற்கு பதில் சொல்ல தெரியாமல் திகைத்தாள் அந்த தாய்.
இளம் வயதில் பயம் என்றாலே என்னவென்று அறியாத அந்தச் சிறுவன் யார் தெரியுமா?
பல நாடுகளை வென்று வெற்றிகளை அள்ளிக்குவித்த மாவீரன் நெப்போலியன் தான் அவன்.

Sunday, February 8, 2015

" தாலி "யின் மகத்துவங்கள்

திருமணத்தின் போது பெண்ணிற்குக் கட்டப்படும் " தாலி "யின் மகத்துவங்கள் !!
தாலி - நம் குடும்ப வாழ்வியலின் ஆதாரம். திருமணம் ஒரு ஆண், பெண்ணின் வாழ்வை மாற்றுகிறது. தாலி அதை உறுதிப்படுத்துகிறது.
அந்த மங்கலநாண் திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது இழைகளால் ஆனதாக அணிவிக்கப்படுகிறது. அவை வாழ்கையின் ஒன்பது தாற்பரியங்களைக் குறிக்கிறது.
அவை-
1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
2. மேன்மை
3. ஆற்றல்
4. தூய்மை
5. தெய்வீக நோக்கம்
6. உத்தம குணங்கள்
7. விவேகம்
8. தன்னடக்கம்
9. தொண்டு
ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றன.
இவற்றைக் கட்டிய ஆணும், கட்ட்ப்பெற்ற பெண்ணும் வாழ்வில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தில் மாங்கல்யம் அமைக்கப்பட்டதாக காயத்ரி மந்திரம் குறிப்பிடுகிறது. தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு
.
தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது. தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான்.
(இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை. இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது.
சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என சொல்லும் தாலியை - மண அடையாள வில்லையைக் குறிக்கும் தாலி என்பது மஞ்சள் பொருத்திய நாணை முதலில் குறித்திருக்க வேண்டும்;
பின்னால் செல்வம் படைத்தோரால் அந்த மஞ்சள் பொன்னாகி இருக்கிறது. (உடனே பொன் தான்,தாலியின் அடையாளம் என்று நாம் பொருள் கொள்ளக் கூடாது. மஞ்சள் தான் அதன் அடையாளம்.) மற்றும் ‘ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தாலி, புலிப்பல் தாலி, புலிநகத் தாலி ,அம்மன் தாலி போன்றவையும் இருந்து இருக்கிறது
ஆயிரத்தில் ஒருவன்
சோழர்களை மையமாக வைத்து இயக்குனர் செல்வராகவன் அவர்களால் எடுக்கப்பட்ட "ஆயிரத்தில் ஒருவன்" படம் பார்த்த போது இப்படி கற்பனையாக ஒரு கதையை எடுப்பதற்கு பதிலாய் உண்மையாக அவர்களின் ஆட்சியின் போது நடந்த இந்த விஷயத்தை படமாக்கி இருந்திருந்திருந்தால் எவ்வளவு சுவாரசியமாக அந்த கதை நகர்ந்திருக்கும் என்ற கவலை இருந்தது.
வருடம் 910, பாண்டிய நாட்டை கைப்பற்ற பராந்தக சோழனின் பெரும்படை மதுரையை முற்றுகை இடுகின்றது, படை எடுப்பினால் பாண்டிய மன்னன் "மாறவர்மன் இரண்டாம் ராஜசிம்மன்" மதுரையை இழக்கிறான். இலங்கையை ஆண்டுகொண்டிருந்த ஐந்தாம் கசப்பனிடம் உதவி நாடினான். பாண்டியனுக்கு உதவ சக்கசேனாபதி தலைமையில் ஒரு படையை தன நாட்டில் இருந்து அனுப்பினான் இலங்கை மன்னன். வெள்ளூர் என்ற இடத்தில் பாண்டிய இலங்கை கூட்டுப் படை சோழர்களை எதிர்த்து களம் இறங்குகின்றது,
போரில் சோழர்கள் வெற்றி பெறுகிறார்கள். தன்னுடைய படையை திரும்பப் பெற்றுக்கொள்கிறான் இலங்கை அரசன். இந்த போரினால் பாண்டிய நாடு சோழர்கள் வசமாகின்றது. பாண்டிய நாட்டை வென்றதன் அடையாளமாய் பாண்டிய மன்னனின் மணி மகுட்டத்தை சூட்டிக் கொள்ள மதுரைக்கு வந்த பராந்தகனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது, பாண்டியன் தன்னுடைய மணிமுடியையும், இந்திர ஆரத்தையும் எடுத்துக் கொண்டு இலங்கை ஓடி, இலங்கை மன்னனிடம் அவற்றை பத்திரமாக வைத்திருக்கும் படி சொல்லிவிட்டு சேர நாடு வந்துவிடுகிறான். மணி முடி இலங்கையில் இருப்பது தெரிந்து அவற்றை தன்னிடம் ஒப்படைக்கும் படி பராந்தகன் கேட்டும் இலங்கை மன்னன் திருப்பித் தராததால், அவற்றைக் கைப்பற்ற இலங்கைக்கு சோழர் படையை அனுப்பி வைக்கிறான், இலங்கை மன்னன் நான்காம் உதயன் அவற்றை எடுத்துக் கொண்டு இலங்கையின் தென்பகுத்திக்கு ஓடிவிடுவதால் போரில் சோழர்களின் படை வெற்றி பெறமுடிந்தாலும் அந்த மணிமுடியையும் ஆரத்தையும் கைப்பற்றமுடியவில்லை!.
பராந்தகனுக்கு பின்னர், கண்டராத்திதன், சுந்தர சோழன், உத்தம சோழன் என பலரும் ஆட்சி செய்கிறார்கள், அந்த மணி முடியை கைப்பற்றவில்லை, ஏன் இவர்களுக்கு பின்னர் வந்த ராஜ ராஜ சோழன் கூட இலங்கை மீது படை எடுத்தான், அப்போது கூட பாண்டியனின் அந்த மணிமுடியை பிடிக்க முடியவில்லை, 1017 ஆம் ஆண்டு ஒரு வேங்கை சோழ தேசத்தில் இருந்து புறப்படுகின்றது, அந்த வேங்கைக்கு பயம் என்றால் என்னவென்று தெரியாது, வெற்றியை மட்டுமே ருசித்த அந்த வேங்கை இலங்கையில் கால் வைக்கின்றது. தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என முதல் முறையாக இலங்கை மொத்தமும் சோழர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருகின்றது அந்த வேங்கை, அதோடு மட்டும் நிற்கவில்லை, வெறி கொண்ட அந்த வேங்கை தன் முப்பாட்டன் காலத்தில் பாண்டிய மன்னன் இலங்கையில் கொண்டு பத்திரப்படுத்திய அந்த மணிமுடியையும், இந்திர ஆரத்தையும் கண்டுபிடிக்கின்றது, இது மட்டும் போதாது, பல தலைமுறைகளாக இதை சோழர்களுக்கு கொடுக்காமல் வைத்திருந்த அந்த இலங்கை மன்னனின் மணிமுடியையும், அந்த அரசனின் மனைவி மணிமுடியும் சேர்த்து பறித்துக் கொண்டு சோழ தேசம் நோக்கி வந்தது அந்த வேங்கை, பராந்தகன் காலத்தில் பாண்டியனின் மணிமுடியை இலங்கை மன்னன் பெற்றுக்கொண்ட போது அந்த வேங்கை பிறந்திருக்க கூட வாய்ப்பில்லை!. ஆம்.. அந்த வேங்கையின் பெயர் "ராஜேந்திர சோழன்"!. அவன் "ஆயிரத்தில் ஒருவன்" இதோ கீழே அந்த கல்வெட்டு...
"பொருகடல் ஈழத்து அரசர்தம் முடியும்
ஆங்கவர் தேவியர் ஓங்கு எழில் முடியும்
முன்னவர் பக்கம் தென்னவர் வைத்த
சுந்தர முடியும் இந்திரன் ஆரமும்
தென்திரை ஈழ மண்டலம் முழுவதும்...."